முன் விரோதம் காரணமாக இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி பாலக்கரையை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இரண்டு நாடுகளுக்கு முன் மீண்டும் இவர்களுக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஸ்ரீதரின் அண்ணன் கமலக்கண்ணனும் அவரது நண்பர் தங்கமுத்துவும் மணிகண்டனை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றனர். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த பாலக்கரை போலீசார் கமலக்கண்ணனையும் அவரது நண்பரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







