சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’. வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இப்படத்தை சித்தாரா எண்டர்டெய்ன்மன்ட் தயாரித்துள்ளது. இப்படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ராதிகா, ரவீனா டண்டன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 14 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். அண்மையில் படத்தின் முதன் பாடலாக ‘பட்டாம்பூச்சி’ வெளியாகி இருந்தது. இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதனிடையே நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை (ஜூலை 23) ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தின் 2-வது பாடலின் புரோமோ வெளியாக உள்ளது. இந்த பாடல் நடிகர் சூர்யாவின் குரலில் இந்த பாடல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




