GOLD RATE | தங்கம் விலை குறைவு – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.230 குறைந்துள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது. இதனிடையே தங்கம் விலை கடந்த 10, 11ம் தேதிகளில் விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதனிடையே நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,430-க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,15,440-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ரூ.280-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,80,000-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், இன்று தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.230 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,200-க்கும், சவரனுக்கு ரூ.1,840 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,13,600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ரூ.270-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 குறைந்து ரூ.2,70,000-க்கு விற்பனையாகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.