லார்ட்ஸில் ரோகித் விளாசிய சதம்… ஓய்வு குறித்தான வதந்திகளுக்கு பதிலடி – சாஸ்திரி…!

லார்ட்ஸில் ரோகித் விளாசிய சதம் அவரது ஓய்வு குறித்தான வதந்திகளுக்கு பதிலடி கொடுத்துள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஒரு நாள் போட்டிக்கு பின் ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவிக்க உள்ளதாக வதந்திகள் பரவின. போட்டிக்கு முன்னதாக பரவிய இந்த வதந்திகளுக்கு சமீப காலமாக அவரது பார்ம் இன்மையே காரணமாக கூறப்பட்டது. 2027 கிரிக்கெட் உலக்கோப்பையில் ரோகித் சர்மா பங்கு பெறுவார் என்று எதிர்பார்த்து இருந்த அவர்களது ரசிகர்களுக்கு இச்செய்தியால் அதிர்ச்சியடைந்தனர்.

ஆனால் லார்ட்சில் ரோகித் சர்மா விளாசிய சதம் அவரது ஓய்வு குறித்தான வதந்திகளுக்கு அடி கொடுத்துள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

இது தொடர்பாக சாஸ்திரி, “அந்த (இங்கிலாந்திற்கு எதிரான) கடைசி ஒருநாள் போட்டிக்கு முன்பு நிறைய சலசலப்புகள் ஏற்பட்டன. அதற்கு, மட்டையால் ஒரு அருமையான, இறுக்கமான அடி 138 ஆகும். லார்ட்ஸில் இது அவரது முதல் சதம். அவர் எல்லாவற்றையும் பார்த்துவிட்டார், கேப்டனாக மும்பை அணிக்காக ஐந்து கோப்பைகளை வென்றுள்ளார்” எனக் கூறினார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் டி 20 தொடரை 4-0 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை 3 -1 என்ற கணக்கிலும் இங்கிலாந்து அணி கைப்பற்றியது.

முன்னதாக லார்ட்ஸில் நடைபெற்ற இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 வது ஒரு நாள் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியாவை 27 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. ஆனால் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா 110 ரன்களில் 138 ரன்கள் குவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.