கேரளாவில் முதன்முறையாக குங்குமப்பூ சாகுபடி செய்த விவசாயி..!

கேரளாவில் முதன்முதலில் காந்தளூரில் விவசாயி ஒருவர் குங்குமப்பூ பயிரிட்டு அறுவடை செய்துள்ளார். பல்வேறு அரிய மருத்துவ குணங்கள் கொண்டது குங்குமப்பூ.  இந்தியாவின் இமயமலைப் பகுதிகளில் காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகர் பகுதிகளில் மட்டுமே விளையக்கூடியது.  அந்த…

கேரளாவில் முதன்முதலில் காந்தளூரில் விவசாயி ஒருவர் குங்குமப்பூ பயிரிட்டு அறுவடை செய்துள்ளார்.

பல்வேறு அரிய மருத்துவ குணங்கள் கொண்டது குங்குமப்பூ.  இந்தியாவின் இமயமலைப் பகுதிகளில் காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகர் பகுதிகளில் மட்டுமே விளையக்கூடியது.  அந்த மருத்துவ மகத்துவம் நிறைந்த குங்குமப்பூவை,  கேரளா மாநிலம் மூணாறு காந்தளூரிலுள்ள பெருமலையில் முதன் முறையாக ராமமூர்த்தி என்ற விவசாயி சாகுபடி செய்துள்ளார்.

தனக்கு சொந்தமான 28 செண்டு நிலத்தில் வேளாண்துறை உதவியுடன் கடந்த ஆண்டு குங்குமப்பூ விவசாயம் செய்தார்.  ஆனால் கடந்த ஆண்டு பெய்த மழை மற்றும் காலநிலையால் குங்குமப்பூவை அறுவடை செய்ய முடியவில்லை.

ஆனால் அவர் மனம் தளராமல் இந்த ஆண்டும் தனது நிலத்தில் சுமார் 200 கிலோ குங்குமப்பூ கிழங்குகளை நடவு செய்தார்.  இது கிழங்குகளிலிருந்து தளிர்விட்டு சுமார் 50 நாட்களில் குங்குமப்பூ அறுவடைக்கு தயாரானது.  குறுகிய கால பயிர் என்பதால் 50 முதல் 60 நாட்களில் குங்குமப்பூ அறுவடைக்கு தயாராகும்.  அக்குங்குமப்பூகளை  அறுவடை செய்தார்.  குங்குமப்பூ காஷ்மீரில் உள்ளதுபோல் நல்ல நிறமும், நல்ல மனமும்
உள்ளதாக வேளாண்துறையினர் தெரிவித்தனர்.

குங்குமப்பூ விவசாயம் செய்தால் ஏக்கருக்கு 1.5 கிலோ குங்குமப்பூ கிடைக்கும்.  ஒரு கிலோ குங்குமப்பூ 3 லட்ச ரூபாய்க்கு விலை போவதால், 5 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டமுடியும் என
தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.