சச்சின் டெண்டுல்கர் தனது 2011-ம் ஆண்டு விளையாடிய உலககோப்பை இந்திய அணி வீரர்களுக்கும், அனைத்து இந்தியர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய நட்சத்திர கிரிக்கேட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கடந்த மார்ச் 28ம் தேதி அன்று கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
மேலும் அவரது குடும்பத்தினரும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டனர். ஆனால் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்று தெரியவந்தது. இந்நிலையில் தற்போது சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று செய்தி ஒன்று வெளியிட்டார்.
அதில் “ நான் மருத்துவர்களின் ஆலோசனையின் கீழ் முன்னெச்சரிக்கை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன் என கூறியிருந்தார். இந்நிலையில் விரைவில் நான் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்புவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் எனக்காக கடவுளிடம் பிராத்தனை செய்த அனைவருக்கும் மிக்க நன்றி எனவும் அனைவரும் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருக்கவேண்டும் என்றும் என்னைப் போலப் பலரது உடல் நிலையைக் கவனித்துக்கொள்ளும் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் இந்தியாவின் 2011-ம் ஆண்டு இந்திய அணி படைத்த வரலாற்று சாதனையை நினைவு கூறும் நாள் இன்று. கடந்த 2011-ம் ஆண்டு மறக்க முடியாத நாளாக இன்றைய நாள் பார்க்கப்படுகிறது. இதுவரை நடைபெற்ற உலககோப்பை போட்டிகளில் இரண்டு முறை இந்தியா வென்றுள்ளது. மேலும் இந்திய அணி உலக கோப்பை வென்று இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடந்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் பிரபல இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் சமூகவலைதளங்களில் அவர்களது சந்தோசமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும் இதனை நினைவு கூறும் வகையில், சச்சின் டெண்டுல்கரும் தனது 2011-ம் ஆண்டு விளையாடிய உலககோப்பை இந்திய அணி வீரர்களுக்கும், அனைத்து இந்தியர்களுக்கும் வாழ்த்து” தெரிவித்துள்ளார்.







