குடும்பத்துடன் சுற்றுலா சென்ற சச்சின் டெண்டுல்கர் – புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தற்போது தனது மனைவி அஞ்சலி மற்றும் மகள் சாரா டெண்டுல்கருடன் மசாய் மாரா சரணாலயத்திற்கு சுற்றுலா சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  இந்தியாவையும், கிரிக்கெட்டையும் பிரிக்கவே முடியாது.…

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தற்போது தனது மனைவி அஞ்சலி மற்றும் மகள் சாரா டெண்டுல்கருடன் மசாய் மாரா சரணாலயத்திற்கு சுற்றுலா சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இந்தியாவையும், கிரிக்கெட்டையும் பிரிக்கவே முடியாது. கிரிக்கெட் என்றாலே  தவிர்க்கவே முடியாத பெயர் சச்சின் டெண்டுல்கர். இவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், சமூகவலைதளங்கள் மூலம் கிரிக்கெட் தொடர்பான பதிவுகளையும், தனது சொந்த வாழ்க்கையின் நிகழ்வுகளையும் அவ்வபோது பகிர்ந்து வருகிறார்.

சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் தனது மனைவி அஞ்சலி மற்றும் மகள் சாரா டெண்டுல்கருடன் கென்யாவில் உள்ள மசாய் மாரா சரணாலயத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். மசாய் மாரா சரணாலயம் சிங்கங்கள், சிறுத்தைகள் மற்றும் ஆப்பிரிக்க யானைகளுக்கு பிரபலமானது. சச்சின் தனது சுற்றுலா படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். அங்கு சச்சின் தனது மகள் மற்றும் மனைவியுடன் ஜங்கிள் சஃபாரி சென்று கொண்டிருக்கும்  புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படத்தின் தலைப்பில், ‘மாசாய் மாராவில் குடும்பத்துடன் மகிழ்ச்சியான தருணங்கள்’ என சச்சின் எழுதியுள்ளார். இந்த பதிவு பகிரப்பட்டதிலிருந்து, இதுவரை ஒரு மில்லியனுக்கு நெருக்கமாக லைக்குகளைக் குவித்துள்ளது. மேலும் இதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த பதிவில் பல்வேறு கமெண்டுகளையும், சிலர் இதய எமோஜிகளையும் அளித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.