கன்னியாகுமரி மாவட்ட வன பகுதியான அப்பர் கோதையார் பகுதியில் அரிக்கொம்பன் யானை நலமுடன் சுற்றித் திரிவதாக வனத்துறையினர் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பத்தில் சுற்றித்திரிந்த அரிக்கொம்பன் யானையை வனத்துறையினர் கடும் சிரமத்திற்கு பிறகு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் அதனை பாதுகாப்பாக அகத்தியர் மலை கோதையாறு பகுதிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.
யானையின் நடமாட்டத்தினை களக்காடு, அம்பாசமுத்திரம் மற்றும் கன்னியாகுமரி வனக்கோட்ட பணியாளர்கள் இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர். ஜீன் 6ம் தேதி முதல் வன உயர் அதிகாரிகள், கால்நடை மருத்துவக்குழு. முன் களப் பணியாளர்கள் உள்ளடக்கிய மொத்தம் 6 குழுக்கள் அரிக்கொம்மன் கழுத்தில் பொறுத்தப்பட்டுள்ள ரேடியோ காலர் தொழில்நுட்பம் மூலம் யானையின் நடமாட்டம் துல்லியமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வனத்துறை சார்பாக யானைக்கும், பொது மக்களுக்கும் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து எடுக்கப்பட்டுள்ளது” அரிக்கொம்மன் பற்றிய சமீபத்தில் வனத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் வனத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் குற்றியாறு அணை பகுதியில் யானை உலா வருகின்றன, தொடர்ந்து இங்குள்ள புல்லை மட்டுமே தின்று வளரும் நிலையில் இயற்கை வனப்பு மிகுந்த வன பகுதியுடன் அரிக்கொம்பன் யானை ஒன்றி வாழ துவங்கி விட்டதாக வனத் துறை தெரிவித்தனர். சில தினங்களுக்கு முன்பு யானை மெலிந்த நிலையில் காணப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின. இந்த நிலையில் யானை நலமுடன் சுற்றி திரியும் விடியோ வெளியாகி உள்ளது.







