திருப்பதியில் 3டன் மலர்களால் கோவிந்தராஜ சுவாமிக்கு புஷ்ப யாகம்..!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், மூன்று டன் எடையுடைய மலர்களால் கோவிந்தராஜ சுவாமிக்கு புஷ்ப யாகம் விமரிசையாக நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவம் நடந்து முடிந்த பின்னர், உற்சவ மூர்த்திகளுக்கு புஷ்ப…

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், மூன்று டன் எடையுடைய மலர்களால் கோவிந்தராஜ சுவாமிக்கு புஷ்ப யாகம் விமரிசையாக நடைபெற்றது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவம் நடந்து முடிந்த பின்னர், உற்சவ மூர்த்திகளுக்கு புஷ்ப யாகம் நடத்துவது ஐதீகம். இந்த ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நடந்து முடிந்ததால், இன்று புஷ்ப யாகம் ஏகாந்தமாக நடத்தப்பட்டது. உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமியை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ள மண்டபத்தில் இன்று காலை எழுந்தருள செய்தனர்.

அதனை தொடர்ந்து திருக்கல்யாண மண்டபத்தில் காலை 8:00 மணி முதல் மாலை 4 மணி வரை சுமார் மூன்று டன் எடையுள்ள 12 வகையான மலர்களால் உற்சவ மூர்த்திகளுக்கு புஷ்ப யாகம் நடத்தப்பட்டது. ரோஜா, முல்லை, மல்லி, சம்பங்கி, சாமந்தி மற்றும் துளசி, தவனம் போன்றவற்றால் உற்சவ மூர்த்திகளுக்கு அர்ச்சனை செய்யப்பட்டது. புஷ்பையாகத்தை தொடர்ந்து மாலை திருப்பதியில் உள்ள திருமாடா வீதிகளில் சாமி ஊர்வலம் நடைபெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.