முக்கியச் செய்திகள் இந்தியா பக்தி

நிறைபுத்தரிசி பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு

கேரள மாநிலத்திலுள்ள உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆடி மாத நிறைபுத்தரிசி பூஜைக்கான நடை இன்று மாலை திறக்கப்படவுள்ளது.

இந்நிலையில் மழை காரணமாக பக்தர்கள் பம்பை ஆறு, நீலி மலை வழி பாதையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பம்பை ஆற்றில் வெள்ளப் பெருக்கு மற்றும் மலை பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வருவதால் மாவட்ட ஆட்சியர் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நிறை புத்தரிசி பூஜை நாளை காலை 4 மணிக்கு நடைபெறுகிறது. மேலும் சந்நிதானத்தில் வேயப்பட்ட தங்க ஓடுகள் சேதமடைந்து மழை நீர் ஒழுகும் நிலையில் அதை மாற்றுவதற்கான பணியும் இன்றும் தொடங்கவுள்ளது.

தேவஸ்வம் வாரியத்திற்கு சொந்தமான செட்டிக்குளங்கரை வயல்களில் இருந்து அறுவடை செய்யப்பட்ட முதல்போக சாகுபடியில் விளையும் நெற்கதிர்களை அறுவடை செய்து, அதை சபரிமலையில் வைத்து வழிபடுவது நிறைபுத்தரிசி பூஜையாகும்.
நெற்கதிர்களை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு, மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி ஆகியோர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்.

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் – குருவாயூரப்பன் கோயிலில் இன்று சபரிமலையை பின்பற்றி நிறைபுத்தரிசி கொண்டாடப்படவுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அதிமுக அலுவலக விவகாரம்: ஓ.பி.எஸ், இ.பி.எஸ்க்கு வருவாய்த்துறை நோட்டீஸ்

G SaravanaKumar

கொரோனாவை கட்டுப்படுத்துவது பற்றி ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுமா?

EZHILARASAN D

உர விலை 58 சதவிகிதம் உயர்வு; திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

Gayathri Venkatesan