சேர்க்கையை ரத்து செய்ய தனி கட்டணம் கூடாது-யுஜிசி உத்தரவு

ஏற்கனவே கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ள மாணவர்கள் அக்டோபர் 31-ம் தேதிக்குள் பாதியிலேயே வெளியேறும் பட்சத்தில், அவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் திருப்பித்தர வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. பொதுநுழைவுத் தேர்வை…

ஏற்கனவே கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ள மாணவர்கள் அக்டோபர் 31-ம் தேதிக்குள் பாதியிலேயே வெளியேறும் பட்சத்தில், அவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் திருப்பித்தர வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொதுநுழைவுத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் பலர், முன்னெச்சரிக்கையாக வேறு உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். அவர்களின் நலன் கருதி யுஜிசி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு, UGC உத்தரவு பிறப்பத்துள்ளது.

சேர்க்கையை ரத்து செய்தால் அவர்கள் செலுத்திய அனைத்து கட்டணத்தையும், முழுவதுமாக திருப்பியளிக்க வேண்டும். சேர்க்கையை ரத்து செய்வதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கக் கூடாது.

முன்னதாக, மாணவர்கள் வேறு கல்லூரிகளில் சேர்வதற்காக இடைநின்றால் கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் சேர்க்கைக் கட்டணத்தை ரத்து செய்வதற்கு தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.