கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அன்னதானம் வழங்கியதில் முறைகேடு செய்த முன்னாள் தேவசம் போர்டு நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வரும் நிலையில் கடந்த 2018-19ம் ஆண்டில் நிலக்கல் பகுதியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியதில் ரூ.51 லட்சம் முறைகேடு செய்ததாக தகவல் கிடைத்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து அப்போதைய லஞ்ச ஒழிப்பு பிரிவு எஸ்.பியான பிஜோய் தலைமையில் விசாரணை நடந்தது. இதன் தொடர்ச்சியாக முன்னாள் தேவசம் போர்டு நிர்வாக அதிகாரியான ஜெயபிரகாஷை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கைது செய்தனர்.
முன்னதாக கொல்லம் பகுதியை சேர்ந்த வியாபாரி ஒருவரிடம் காய்கறி வாங்கியதாக ரூ.30 லட்சம் ஊழல் செய்த நிலையில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் விசாரணை செய்து வந்தனர்.
தற்போது இதனைத் தொடர்ந்து ரூ.51 லட்சம் கையாடல் செய்தது நிரூபணம் ஆன நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.