ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!!

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் ஒரு மண்டலம் விரதமிருந்து இருமுடிக்கட்டி சென்று தரிசனம் செய்வது வழக்கம். ஒவ்வொரு தமிழ் மாதம் தொடங்கிய முதல் 5…

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் ஒரு மண்டலம் விரதமிருந்து இருமுடிக்கட்டி சென்று தரிசனம் செய்வது வழக்கம். ஒவ்வொரு தமிழ் மாதம் தொடங்கிய முதல் 5 நாட்கள் வரை சபரிமலை ஐயப்பன் கோயில் மாதாந்திர பூஜைக்காக திறக்கப்படுவது வழக்கம். அதன்படி ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி மாலை 5.30 மணிக்கு நடையை திறந்து வைக்கிறார்.
கற்பூர ஆழியில் தீபம் ஏற்றப்பட்டவுடன் பதினெட்டாம் படி வழியாக பக்தர்கள் சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 16ஆம் தேதி முதல் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும். இந்த பூஜை 20 ஆம் தேதி வரை நடைபெறும். 20 ஆம் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு கோயில் நடை அடைக்கப்படும். பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மேலும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக நிலக்கல்லிலும் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு நடைபெறும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக நிலக்கல்லிலும் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு நடைபெறும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.