மீன்பிடி தடைக்காலம் நிறைவு: கடலுக்கு புறப்பட்ட மீனவர்கள்!!

மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்த நிலையில், மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டனர். தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும் மீன்வளத்தை பாதுகாக்கும் முயற்சியுடனும் ஆண்டுதோறும் மீன்பிடி தடைக்காலம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி நடப்பு ஆண்டில் ஏப்ரல் 15 முதல் 14…

மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்த நிலையில், மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டனர்.
தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும் மீன்வளத்தை பாதுகாக்கும் முயற்சியுடனும் ஆண்டுதோறும் மீன்பிடி தடைக்காலம் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி நடப்பு ஆண்டில் ஏப்ரல் 15 முதல் 14 ஆம் தேதி வரை மீன்பிடி தடை காலமாக கடைபிடிக்கப்பட்டது. இந்த தடை காலத்தை பயன்படுத்தி, மீனவர்கள் தங்கள் படகுகளையும், வலைகளையும் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். வலைகளில் உள்ள கிழிந்த மற்றும் சேதம் அடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் படகுகளில் ஏற்பட்டிருந்த பழுதுகள்  மற்றும் உதிரிபாகங்களை மாற்றும் பணியிலும் ஈடுபட்டனர்
இந்நிலையில் 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் முடிவடைந்த நிலையில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். சென்னை காசிமேடு பகுதி மீனவர்கள் விசைப்படகுகளுக்கு பூஜை செய்து பூசணிக்காய் உடைத்து கடலுக்கு சென்றனர். விசைப்படகில் டீசல் நிரப்பியும், ஐஸ் ஏற்றி, வலைகளை சரி செய்த மீனவர்கள் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, பின் மீன்பிடிக்க கடலுக்கு புறப்பட்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.