சபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் | ஒரே நாளில் 52,000 பேர் சாமி தரிசனம்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறந்து 4 நாட்கள் ஆன நிலையில், நேற்று ஒரே நாளில் 52,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 17ஆம் தேதி முதல் மண்டல…

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறந்து 4 நாட்கள் ஆன நிலையில், நேற்று ஒரே நாளில் 52,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 17ஆம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. முதல் நாளில் இருந்தே பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர். மேலும், ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே
தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாதவர்களுக்காக பம்பை, நிலக்கல் எருமேலி, செங்கணூர், குருவாயூர், திருவனந்தபுரம் உள்பட கேரளாவின் பல்வேறு பகுதிகளில் உடனடி முன்பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:உத்தரகண்ட் சுரங்கப்பாதை விபத்து: இடிபாடுகளுக்கிடையில் சிக்கிய தொழிலாளிகளின் முதல் விடியோ வெளியீடு!

ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினசரி பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர். இதனால் கடந்த இரு தினங்களாக பக்தர்கள் வருகை மிக அதிகமாக உள்ளது.

கடந்த 4 நாளில் சபரிமலையில் தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை 2.15 லட்சத்தை
தாண்டியுள்ளது. அந்த வகையில்,  நேற்று ஒரே நாளில் 52,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.  ஆன்லைனை விட நேர்டியாக கவுண்டர்களில் தான் அதிக அளவில் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

வனப்பாதை புல்மேடு வழியாக நடந்து செல்லும் பக்தர்களுக்கு வனத்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தி உள்ளன. நேற்று முதல் திறக்கப்பட்ட வனப் பாதையில் வன விலங்குகள் தொல்லையோ, பிற புகார்களோ இல்லை என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வனபாதையில் 50 அதிகாரிகளை நியமித்து வனத்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.