உத்தரகண்ட் சுரங்கப்பாதை விபத்து: இடிபாடுகளுக்கிடையில் சிக்கிய தொழிலாளிகளின் முதல் விடியோ வெளியீடு!

உத்தரகண்ட் மாநிலம்,  சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளிகளின்  முதல் விடியோ வெளியாகி உள்ளது. உத்தரகண்ட் மாநிலம்,  உத்தரகாசியில் பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா,  தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.  இப்பணியில்…

உத்தரகண்ட் மாநிலம்,  சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளிகளின்  முதல் விடியோ வெளியாகி உள்ளது.

உத்தரகண்ட் மாநிலம்,  உத்தரகாசியில் பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா,  தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.  இப்பணியில் 41 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இந்த சுரங்கப் பாதையின் ஒரு பகுதியில் நவம்பர் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை மண் சரிவு ஏற்பட்டது.  இந்த விபத்தில் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.  அவர்களை மீட்கும் பணியில் மத்திய அரசும்,  உத்தரகண்ட் மாநில அரசும் ஈடுபட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்:ஆந்திரா: செம்மரம் கடத்தியதாக 30 தமிழர்கள் கைது!

சுரங்கத்தின் உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு குழாய் மூலம் ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வருகிறது.  41 தொழிலாளர்களை மீட்க மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழு 10-வது நாளாக ஈடுபட்டு வருகிறது. 

மேலும், அவர்களுக்கு குழாய் வழியாக உணவு,  குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.  சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  இடிபாடுகளுக்கிடையில்  சிக்கிய தொழிலாளர்களை தொடர்புகொள்ள எண்டோஸ்கோபி கேமரா சாதனம் டெல்லியில் இருந்து கொண்டுவரப்பட்டு புதிய குழாயில் செலுத்தப்பட்டது. அந்த கேமரா சிக்கிய தொழிலாளர்களின் இடத்தை சென்றடைந்தது.

அதனை தொடர்ந்து, மீட்புக் குழுவினர், தொழிலாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்திய முதல் விடியோ காட்சிகள் வெளிவந்துள்ளது. தொழிலாளர்கள் நலமாக இருப்பதை கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும்,  மீட்புக் குழுவினர் வாக்கி-டாக்கி மூலம் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளிகளுடன் பேசும் முதல் விடியோ தற்போது வைரலாகியுள்ளது.

https://twitter.com/dwsamachar/status/1726838539521040427

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.