சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் ஜாமீன் கோரி காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக சிபிஐ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ்,…

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் ஜாமீன் கோரி காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக சிபிஐ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் இருவரும் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் ஸ்ரீதர் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், தப்பிச் செல்லவோ சாட்சியங்கள் ஆதாரங்களைக் கலைக்கவோ வாய்ப்பு இல்லை என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. அந்த மனுவானது இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக பதில் அளிக்குமாறு சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.