செய்திகள்

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலை!

தமிழகத்தில் தற்போது நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றில், அதிமுக வேட்பாளர் எஸ். பி.வேலுமணி 4,878 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது. இந்நிலையில் தொண்டாமுத்தூர் தொகுதியில் முதல் சுற்றில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 4,878 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கார்த்திகேய சேனாதிபதி 2,589 வாக்குகள் பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளார். இந்த தொகுதியில் அமமுக சார்பில் சதீஷ்குமார், மக்கள் நீதி மய்யத்தின் கட்சி சார்பில் ஷாஜஹான் மற்றும் நாம் தமிழர் சார்பில் கலையரசி போட்டியிட்டனர்.

Advertisement:

Related posts

கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் நீக்கம்!

Jeba

அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : உதயநிதி

Niruban Chakkaaravarthi

மூன்றாவது அணி என்பது சூப்பர் நோட்டா – கார்த்தி சிதம்பரம்

Gayathri Venkatesan