கார்ட்டூன் கதாபாத்திரமான ‘பாப்பாய்’ மீது அதீத ஆர்வம் கொண்ட ரஷ்ய இளைஞர் மேற்கொண்ட தவறான முடிவால் அவரின் போலி ‘பைசப்ஸ்களை’ அகற்ற சிக்கலான அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
உலகம் முழுவதும் ‘90‘ ஸ் கிட்ஸ்களுக்கு’ மிகவும் பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரம் பாப்பாய். இந்த கார்ட்டூன் கதாபாத்திரத்தின் மீது அதீத ஆர்வம்கொண்டவர் ரஷ்ய இளைஞர் கிரில் ‘kirill’. இதனால் பாப்பாய் போல் ‘பைசப்ஸ்’ வைத்துக்கொள்ள முடிவு செய்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உடற்பயிற்சி செய்து ‘பைசப்ஸ்’ வளர்த்துக்கொள்ளாமல் அதற்காக தன்னுடைய கையில் பைசப்ஸ் பகுதியில் பெட்ரோலியம் ஜல்லிகளை ஊசியின் மூலம் செலுத்திக்கொண்டார். இதனால் அவருக்கு பாப்பாய் போல் பைசப்ஸ் வந்தது. கூடவே நாளடைவில் பைசப்ஸ் பகுதியில் உள்ள ரத்த நாளங்கள், நரம்புகள் இறுக்கமாகி கைகள் வீங்கத் தொடங்கியது. ஒருகட்டத்தில் எங்கும் நகரமுடியாமல் அவர் ஆசையாக வைத்த பைசப்ஸ்களே அவருடைய உயிருக்கு ஆபத்தை உருவாக்கியது.
பைசப்ஸ் பகுதியில் கட்டியுள்ள ரத்தங்களை சுத்திகரிக்க ‘டயசலிஸ்’ நிலைக்குத் தள்ளப்பட்டார். இதனால் பைசப்ஸ்களை அகற்ற கடந்த ஒருவருடமாகப் போராடி 2019-ம் ஆண்டிலிருந்து போராடி வந்தார்.
ஒருவருடம் காத்திருப்புக்குப் பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் கிரிலின் போலி பைசப்ஸ்கள் அகற்றப்பட்டது.
“தன்னைப்போல் இதுபோன்ற முட்டாள்தனமான முடிவை யாரும் எடுக்கவேண்டாம்” என ரஷ்ய இளைஞர் கிரில் வலியுறுத்தியுள்ளார்.