ஸ்கேட்டிங் போட்டி 2026 : பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

உலக ஸ்கேட்டிங் விளையாட்டுப் போட்டிகள் 2026 தொடரில் பதக்கங்களை வென்று சாதனை படைத்த வீரர், வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “பாராகுவே நாட்டின் அசுன்சியோன் நகரில் நடைபெற்ற உலக ஸ்கேட்டிங் விளையாட்டுப் போட்டிகள் 2026 தொடரின் ஆண்கள் மாரத்தான் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாடு ஸ்கேட்டிங் வீரர் ஆனந்த்குமார் அவர்களுக்கும், ஜூனியர் பெண்களுக்கான 3000 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஸ்கேட்டிங் வீராங்கனைகள் லட்சிதா, பிரகதி மற்றும் ருத்வ ஆகியோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்!

இந்தப் போட்டிகளில் ஸ்கேட்டிங் வீரர் ஆனந்த்குமார் அவர்கள் ஏற்கனவே 500 மீட்டர் பிரிவில் வெண்கலமும், 1000 மீட்டர் பிரிவில் வெள்ளியும் வென்றிருப்பதோடு, தற்போது மூன்றாவதாகத் தங்கப் பதக்கத்தையும் வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சாதனைகள் விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கத் துடிக்கும் இளைய தலைமுறையினருக்குப் புதிய ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளிக்கிறது.

பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த ஸ்கேட்டிங் வீரர் ஆனந்த்குமார், வீராங்கனைகள் லட்சிதா, பிரகதி மற்றும் ருத்வ ஆகியோர் மேலும் பல உயரங்களை எட்ட வாழ்த்துகிறேன்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.