கிவ் நகரம் மீது தீவிர தாக்குதலில் ஈடுபட்டுள்ள ரஷ்யா

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 8 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் நிலைகுலைந்து போயுள்ளன. உக்ரைனின் முக்கிய நகரங்கள், அணுமின் உலைகள் போன்றவற்றை ரஷ்யா குறிவைத்து தாக்கி…

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 8 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் நிலைகுலைந்து போயுள்ளன. உக்ரைனின் முக்கிய நகரங்கள், அணுமின் உலைகள் போன்றவற்றை ரஷ்யா குறிவைத்து தாக்கி வருகிறது. இந்த போர் காரணமாக உக்ரைன் மக்கள் பல லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்த சூழலில் உக்ரைனிடம் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு ஆக்கிரமிக்கப்பட்ட கிரீமியாவையும், ரஷ்யாவையும் இணைக்கும் முக்கிய பாலத்தில் பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் அந்த பாலம் பலத்த சேதம் அடைந்தது. 3 பேர் உயிரிழந்தனர். இந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் உக்ரைனின் கீவ் நகரம் மீது ரஷ்ய படைகள் தாக்கியதில் பலர் உயிரிழந்து உள்ளதாகவும், ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். மேலும் ஒரே நாளில் உக்ரைன் மீது ரஷ்யா 75 ஏவுகணைகளை ஏவி வீசியதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.