இலங்கைக்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து வருவதற்காக, மதுரையில் இருந்து கொழும்புக்கு வரும் மே மாதம் முதல் விமான சேவை தொடங்கப்படுகிறது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக, சர்வதேச அளவில் விமான போக்குவரத்து பல்வேறு நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலிருந்து பிற நாடுகளுக்கான விமான சேவை ஏப்ரல் 30-ம் தேதி வரை தடை செய்யப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், அவசர தேவைகளை கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட சில நாடுகளுடன் மத்திய அரசு ‘ஏர் பபுள்’ என்ற சிறப்பு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, மே மாதம் 27ஆம் தேதி முதல் மதுரை – கொழும்பு இடையே விமானம் இயக்கப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரை – கொழும்பு இடையே இயக்கப்படும் விமானங்கள் மூலம் இலங்கையில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.