24 ஆண்டுகளுக்குப் பிறகு பயன்பாட்டிற்கு வரும் ஓடுதளம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தோணுகால் மொட்டைமலை அடிவாரத்தில் உள்ள  மிக பழமையான விமான நிலையத்தை விமான பயிற்சி நிலையமாக மாற்ற அரசு முடிவெடுத்துள்ள செய்தி அப்பகுதி மக்களை மகிழ்சியில் ஆழ்த்தியது. கோவையை தலைமையிடமாக கொண்ட இலக்குமி ஆலையின் கிளை 1941ம் ஆண்டு கோவில்பட்டியில் உருவாக்கப்பட்டது. அப்போது அதன் உரிமையாளர்கள்…

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தோணுகால் மொட்டைமலை அடிவாரத்தில் உள்ள  மிக பழமையான விமான நிலையத்தை விமான பயிற்சி நிலையமாக மாற்ற அரசு முடிவெடுத்துள்ள செய்தி அப்பகுதி மக்களை மகிழ்சியில் ஆழ்த்தியது.
கோவையை தலைமையிடமாக கொண்ட இலக்குமி ஆலையின் கிளை 1941ம் ஆண்டு கோவில்பட்டியில் உருவாக்கப்பட்டது. அப்போது அதன் உரிமையாளர்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக இந்த விமான ஓடுதளம் அமைக்கப்பட்டது. 2 கிலோ மீட்டர் நீளமும் 70 அடி அகலமும் கொண்ட இந்த விமான ஓடுதளம் 1978ம் ஆண்டு முதல் பயன்பாட்டிற்கு வந்தது.பல்வேறு தொழிலதிபர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் பயன்பட்டு வந்த இந்த விமான தளம் 1998ம் ஆண்டு வரை பயன்பாட்டில்  இருந்தது.
தற்போது பயன்பாட்டில் இல்லாமல் பராமரிப்பு இன்றி  காணப்படும் இந்த விமான நிலையத்தை அரசு தொழில் வளர்ச்சி கழகம் மூலம் விமான பயிற்சி மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு  தெரிவித்துள்ளார்.
இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கின்ற கோவில்பட்டி மேலும் வளர்ச்சி பெறும் எனவும்  தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பிற்கும் இது ஒரு வரப்பிரசாதமாக அமையும் என கோவில்பட்டி மக்கள் தெரிவிக்கின்றனர் .
மக்களுக்கு பயனளிக்கும் இந்த திட்டம் வரவேற்பு அளிப்பதோடு அதிமுக வின் முழு ஒத்துழைப்பும்  அளிக்கப்படும் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு
தெரிவித்துள்ளார்.
அ.மாரித்தங்கம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.