“சூப்பர் முதலமைச்சராக ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செயல்படுகிறார்”

புதுச்சேரி மாநில அரசின் சூப்பர் முதலமைச்சராக ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனும்,  டம்மி முதலமைச்சராக ரங்கசாமியும் செயல்படுவதாக அம்மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி விமர்சனம் செய்துள்ளார்.   திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் புதுச்சேரி முன்னாள்…

புதுச்சேரி மாநில அரசின் சூப்பர் முதலமைச்சராக ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனும்,  டம்மி முதலமைச்சராக ரங்கசாமியும் செயல்படுவதாக அம்மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி விமர்சனம் செய்துள்ளார்.
 
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி சுவாமி தரிசனம் செய்த பின் நியூஸ்7 தமிழுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மத்திய அரசின் எட்டாண்டுக் காலம் சாதனை இல்லை வேதனை எனவும், மோடி அரசின் எட்டு ஆண்டு திட்டங்களுக்கு பூஜ்ஜியம் மதிப்பெண்கள் தான் கொடுக்கப்பட வேண்டும் என விமர்சித்தார். மேலும்,  பிரதமர் மக்களுக்காக ஏதும் செய்யவில்லை எனக் கூறிய அவர், சுயவிளம்பரங்களையே தேடிக்கொள்வதாகக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரி மாநில அரசின் சூப்பர் முதலமைச்சராக ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனும்,  டம்மி முதலமைச்சராக ரங்கசாமியும் செயல்படுவதாக விமர்சனம் செய்தார். மேலும், புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததற்கு என்.ஆர் காங்கிரஸ் கட்சியே காரணம் எனத் தெரிவித்த அவர், எப்போது வேண்டுமாயினும் தேர்தலைச் சந்திக்கக் காங்கிரஸ் தயாராக உள்ளதாகக் குறிப்பிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
 
தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்திருப்பதாக்கச் சொல்லப்படுவது ஒரு  மாயை எனத் தெரிவித்த அவர், காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாது அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் பிரதமர் மோடி அரசு அமலாக்கத்துறை மூலம் மிரட்டல் விடுப்பதாகவும், அமலாக்கத்துறை பாஜகவின் பொதுச்செயலாளராகச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.