முக்கியச் செய்திகள் இந்தியா

நாடளுமன்றத்தை முடக்கியது ஆளுங்கட்சியின் பிடிவாதமே – திருமாவளவன்

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் இரு அவைகளும் முடங்க மத்திய அரசின் பிடிவாதமே காரணம் என மக்களவை உறுப்பினர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்றோடு முடிவடைந்துள்ள நிலையில் வி.சி.க தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் டெல்லியில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நாடாளுமன்றத்தில் அனைத்து எதிர்கட்சி உறுப்பினர்களும் எழுப்பிய ஒற்றைக்கோரிக்கை பெகசஸ் விவாதம் வேண்டும் என்பதே, ஆனால் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விவாதிக்க மாட்டோம் என்பதில் மத்திய அரசு பிடிவாதமாக இருந்தது, அதனால் தான் அவைகள் முடங்கின என கூறினார். ஆனால் எதிர்கட்சிகள் அவைகளை முடக்கினர் என துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கூறுவது அபாண்டமானது என திருமாவளவன் விமர்சித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பெகாசஸ் உளவு அறியும் மென்பொருள் தொடர்பாக சில மணி நேரம் ஒதுக்கி விவாதித்திருக்கலாம், ஆனால் அரசு அதற்கு தயாராகவில்லை, மத்திய அரசு உளவு பார்க்கவில்லை என்றால் அவர்கள் அவையில் விவாதித்திருக்கலாம் என குறிப்பிட்டார். மேலும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாள் வந்த பிரதமரும், உள்துறை அமைச்சரும் கூட்டத்தொடர் முடியும் நாளிலேயே வந்துள்ளனர் என்றும் கூறினார். அவையை முடக்கியது அரசன் பிடிவாதம் தான் என்றும் அதற்கு எதிர்கட்சிகள் பொறுப்பாக முடியாது என்றும் திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மக்களவை மற்றும் மாநிலங்களவையின் தலைவர்களின் நடவடிக்கைகள், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக உள்ளார்கள் என்பதையே பிரதிபலிக்கிறது என்றும் ஆளும் அரசின் கைப்பாவையாக உள்ளார்கள் என்றும் திருமாவளவன் விமர்சித்தார்.

மேலும் படிக்க: “ஆறாவது கூட்டத்தொடர் ஜனநாயகப் படுகொலையின் சான்று” – சு.வெங்கடேசன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்கு எதிராக வழக்கு; நாளை ஒத்திவைப்பு

EZHILARASAN D

விவேக் சாலை: சாத்தியமானது எப்படி? – மனம் திறந்த பூச்சிமுருகன்

ஒரே நாளில் 45% அதிகரித்த கொரோனா பாதிப்பு

Halley Karthik