அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் நண்பர் எனக்கூறப்படும் சந்திர பிரகாசுக்கு சொந்தமான கேசிபி இன்ஜினியர்ஸ் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள், இன்று இரண்டாவது நாளாக சோதனை நடத்தினர்.
சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் வேலுமணி உட்பட 7 பேர் மீதும், மற்றும் 10 நிறுவனங்கள் மீதும் 7 பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன் மற்றும் வேலுமணிக்கு தொடர்புடைய 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
11 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையில் 13 லட்சம் ரொக்கம் மற்றும் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் எஸ்.பி.வேலுமணியின் நண்பர் எனக்கூறப்படும் சந்திரபிரகாஷுக்கு சொந்தமான கேசிபி என்ஜினியர்ஸ் நிறுவனத்தின் கோவை அலுவலகத்தில் இரண்டாவது நாளாக இன்றும் சோதனை நடைபெற்றது.