முக்கியச் செய்திகள் தமிழகம்

பெட்ரோல் குண்டு வீச்சுக்கு பின்னால் ஆர்எஸ்எஸ், பாஜக; திருமாவளவன் குற்றச்சாட்டு

பெட்ரோல் குண்டு வீச்சுக்கு பின்னால் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் இருக்க வாய்ப்புள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வருகிற அக்டோபர் 2ம் தேதி தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க பேரணி நடத்துவதாக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்திருந்த நிலையில் பேரணி நடைபெறும் இடங்களில் உரிய பாதுகாப்பு மற்றும் அனுமதி வழங்க கோரி தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் தொல்.திருமாவளவன், அக். 2ம் தேதி அனைத்து ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து சமூக நல்லிணக்க பேரணியை நடத்த உள்ளோம். தமிழகத்தை சனாதான சன்பரிவார் கும்பல் குறி வைத்து இங்கு சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், வன்முறையை தூண்டுவதற்கு சதி திட்டம் தீட்டி வருவதாக குற்றம் சாட்டினார்.

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் உள்ளோக்கத்தோடு தான் காய்களை நகர்த்தி வருவதாகவும், வன்முறைகளை கட்டவிழிக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டினார். காந்தியடிகளை படுகொலை செய்த கும்பல் அணிவகுப்பை நடத்த உள்ளதாகவும், அதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து இருந்தாலும், தமிழக அரசு ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த இடம் அளிக்க கூடாது, நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.


தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் நடைபெற்று வரும் பெட்ரோல் குண்டு வீச்சு ஏற்கதக்கதல்ல. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல் குண்டு வீச்சுக்கு பின்னால் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் இருக்க வாய்ப்புள்ளது. அதை காவல் துறை விசாரிக்க வேண்டும். தமிழகத்தில் பாஜக வளர்ச்சி பெற்றதாக சொல்ல முடியாது. அவர்கள் மக்களை நெருங்குவதற்காக தான் வன்முறையை தேடுவதாகவும், வன்முறை மூலமாகவே மக்களை அணுகுகிறார்கள் என்று விமர்சனம் செய்தார்.

மேலும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு அயல்நாட்டில் உள்ளவர்களுக்கு தொடர்பு இருந்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றும், தடை செய்ய கூடிய அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது என்றால் ஏன் அவர்கள் இன்று வரை தடை செய்யவில்லை. ஐஎஸ் அமைப்போடு தொடர்பு இருந்தால் அந்த அமைப்புகளை நீங்கள் தடை செய்யலாம், அரசியல் செய்வதற்காக இந்த நாடகத்தை பாஜக ஆடுவதகாக கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கோவையில் தடம் புரண்ட சரக்கு ரயில்!

Gayathri Venkatesan

அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்

Web Editor

இழி சொல்லுக்கு பதில் சொல்ல நேரமில்லை- முதலமைச்சர்

G SaravanaKumar