எக்காலத்திலும் சனாதன தர்மத்திற்கு அழிவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் அரண் பணி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், கடந்த 20 ஆண்டுகளாக புதியதாக சில பேர் கிளம்பியிருக்கிறார்கள், ஆன்மீகத்திற்கான ஆதாரம் கேட்கிறார்கள். சனாதன தர்மத்திற்கு அழிவே கிடையாது.
தமிழகத்தில் 20 ஆண்டுகளாக சனாதன தர்மம் குறித்து திரித்து பொய் கூறி வருகிறார்கள். முதலும் இல்லை முடிவும் இல்லை. எக்காலத்திலும் சனாதன தர்மத்திற்கு அழிவில்லை. 5000 ஆண்டுகளாக சனாதன தர்மம் உள்ளது. 20 ஆண்டுகளாக தமிழகத்தில் சனாதனத்தை எதிர்க்க துவங்கியிருக்கிறார்கள்.
சனாதனத்தை காப்பாற்ற கூடியவர் தான் நாட்டின் காவலனாக இருக்க முடியும். மோடி அவ்வாறு இருக்கிறார். சிவனடியார்கள் போல என்னால் இருக்க முடியவில்லை. ஒரு கண்ணத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்டக்கூடிய நிலையில் நான் இல்லை. நான் சத்ரியனாக இருக்கிறேன்.








