2026-27 நிதியாண்டிற்கான தமிழ்நாடு பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று தாக்கல் செய்தார். இதில் நதிகள் மீட்பு குறித்தும் தாமிரபரணி, வைகை மற்றும் காவிரி மறுசீரமைப்பு ஆகியவற்றுக்கான சாத்தியக் கூறு ஆய்வுக்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக நீர்வளத்துறைக்கு ரூ.9,264 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கோதாவரி – காவிரி நதிநீர் இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த வலியுறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து காவிரி மற்றும் கொள்ளிடத்தின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிக்கை வெளியாகியுள்ளது.




