தாய்மாமன் தங்க மோதிர திட்டத்திற்கு ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு!

தமிழ்நாடு பட்ஜெட்டில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துரைக்கு ரூ.23,357 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

026-27-ஆண்டுக்கான தமிழ்நாடு பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று தாக்கல் செய்தார். இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துரைக்கு ரூ.23,357 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில்,

தாய்மாமன் தங்க மோதிர திட்டம்: அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும், இத்திட்டத்திற்கு ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நடமாடும் முதியோர் சிகிச்சை மையம்: மூத்த குடிமக்களுக்காக தமிழ்நாடு முழுவதும் 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் படிப்படியாகத் தொடங்கப்படும். இத்திட்டத்திற்க்கு ரூ.33கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தாய் கேர்: இத்திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் கருவுற்ற பெண்களுக்கான சேவை மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்படும். இத்திட்டத்திற்காக ரூ.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மருந்துகளுக்கான நிதி ஒதுக்கீட்டை இந்த அரசு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 100 கோடி ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

    புற்றுநோய் பராமரிப்பு மருத்துவமனை, மாநில முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாகவும், உயர் சிகிச்சை மருத்துவமனையாகவும் மாற்றவும். நோயாளிகளின் முதல் தொடர்பு மையமாக, ஐந்து மண்டல புற்றுநோய் பராமரிப்பு மருத்துவமனைகள் நிறுவவும். இதற்காக ரூ.10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.