பெண் குழந்தை பிறந்தால் ரூ.50,000: மேகாலயா தேர்தலில் பாஜக வாக்குறுதி!

பெண் குழந்தை பிறந்தால் ரூ.50 ஆயிரமும் பட்டப்படிப்பு வரை இலவச கல்வியும் வழங்கப்படும் என பாஜக அறிவித்துள்ளது. மேகாலயா, திரிபுரா மற்றும் நாகலாந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.  மேகாலயாவில் சட்டப்பேரவை தேர்தல் தேதி…

பெண் குழந்தை பிறந்தால் ரூ.50 ஆயிரமும் பட்டப்படிப்பு வரை இலவச கல்வியும் வழங்கப்படும் என பாஜக அறிவித்துள்ளது.

மேகாலயா, திரிபுரா மற்றும் நாகலாந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.  மேகாலயாவில் சட்டப்பேரவை தேர்தல் தேதி வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 2-ம் தேதி நடைபெறவுள்ளது.

இதையடுத்து மேகாலயாவில் போட்டியிடும் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் மேகாலயாவில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அக் கட்சியின் தேசிய தலைவரான ஜெ.பி.நட்டா, தங்களது கட்சி தேர்தல் வாக்குறுதிகளை இன்று வெளியிட்டார்.

இதனையும் படிக்க: தமிழ் வழி பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும்- குஜராத் அரசுக்கு தமிழ் மக்கள் கோரிக்கை!

அப்போது பேசிய அவர், மேகாலயாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்படும் என்றும், அரசு ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

பெண் குழந்தை பிறந்தால், அந்த குழந்தையின் பெயரில் 50 ஆயிரம் ரூபாய் பத்திரம் வழங்கப்படும் என்றும் நட்டா அறிவித்தார். மேலும் பெண் குழந்தைகளுக்கு ஆரம்பக்கல்வி முதல் பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வியும், கணவனை இழந்து தனியாக குழந்தைகளை வளர்க்கும் பெண்களுக்கு ஆண்டுக்கு 24 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக மேகாலயாவில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி சார்பிலும் பெண்களுக்காக பல்வேறு திட்டங்கள் குறித்த வாக்குறுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.