முக்கியச் செய்திகள் தமிழகம்

ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.40 லட்சம் பணம், வைர நகைகள் பறிமுதல்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆவணம் இன்றி எடுத்து வந்த ரூ.40 லட்சம்  ஹவாலா பணம் மற்றும் வைர நகைககை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் வெளியூர்களுக்கு செல்லும் ரயில்கள் அதிகம் இயக்கப்படுகிறது. சென்னை சென்டரலிலிருந்து வெளிமாநிலங்ளுக்கு அதிகமாக ரயில்கள் இயக்கப்படுகிறது. ரயில் நிலையங்களில் ரயிலில் சட்டவிரோதமாக பொருட்கள் ஏதேனும் கொண்டு செல்லப்படுகிறதா என, ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீசார் தொடர்ந்து சோதனையில் ஈடுபடுவது வழக்கம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அந்த வகையில், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருடன் ரயில்வே பாதுகாப்பு படையினர் இணைந்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை எண் 1ல், ஆந்திராவில் இருந்து சென்னை வந்த ஷிவமொக்கா விரைவு ரயிலில் வந்த கோபால் என்ற பயணியை சந்தேகத்திற்கு இடமான வகையில் நடந்து கொண்டார். இதையடுத்து, அவரது உடமைகளை சோதனையிட்ட போது, அதில் ரூ. 40 இலட்சம் ஹவாலா பணம் மற்றும் சேதமடைந்த வைர நகைகள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.


இதையடுத்து, இந்த நகை மற்றும் பணத்திற்கு ஏதேனும் ஆவணம் உள்ளதா என்று அதனை எடுத்து வந்த கோபால் என்பவரிடம் விசாரணை செய்யப்பட்டது. ஆனால் கோபால் கொண்டு வந்த வைர நகை மற்றும் ரூ.40 லட்சம் பணத்திற்கு ஆவணம் எதுவும் இல்லாததை அடுத்து ரயில்வே போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். பின்னர் கோபாலை ஆர்.பி.எப். காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்ததில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயம்

Arivazhagan Chinnasamy

முதலமைச்சர் நாற்காலியை அலங்கரித்தவர்கள் யார் யார்?

Gayathri Venkatesan

புரட்சியாளர்களாக மாற விரும்பினோம்-கைதான இளைஞர்கள் வாக்குமூலம்

EZHILARASAN D