இந்தியா குற்றம் செய்திகள்

தொழில் அதிபரிடம் நூதன முறையில் கொள்ளையடித்த மர்ம நபர்கள்!

புதுச்சேரி அருகே தொழில் அதிபரிடம் விலாசம் கேட்பது போல் நடித்து ரூ. 36 லட்சம் பணம் மற்றும் 80 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி ரெயின்போ நகர் 6-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் கருணாநிதி (60). மதுபான கடை மற்றும் இறால் பண்ணை வைத்திருக்கும் தொழில் அதிபரான இவர், இரவு 9 மணி அளவில் தனது இருசக்கர வாகனத்தில் வெளியே சென்று விட்டு வீட்டின் முன்பு வந்த போது காரில் வந்த 3 பேர் விலாசம் கேட்பது போல் நடித்து தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி அவரை மிரட்டி வாயில் துணியை கட்டி வீட்டின் உள்ளே அழைத்து சென்று மற்றும் அவரை தாக்கி பீரோவில் இருந்த ரூ.36 லட்சம் பணம் மற்றும் 80 சவரன்  நகை ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச்சென்றனர்.

இது தொடர்பாக, அவர் பெரிய கடை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கிழக்கு காவல் கண்காணிப்பாளர் ஸ்வாதி சிங் தலைமையில் வந்த போலீசார் மற்றும் தடவியல் நிபுணர்கள், தடயங்களை சேகரித்து  வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனா். மேலும், அவர்கள் வீட்டில் இருந்த  கண்காணிப்பு கேமிரா டிவியாரை எடுத்து சென்றதால், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

—கா.ரூபி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உலகமே உற்று நோக்குகின்ற இடமாக கீழடி மாறியுள்ளது- அமைச்சர் அன்பில் மகேஷ்

Jayasheeba

சாதிய சிந்தனைகளில் இருந்து மாற்ற தமிழால் மட்டுமே முடியும் – சீமான்

EZHILARASAN D

மோதும் போக்கு அதிகமானால் ஆளுநர்கள் அவலங்களை சந்திக்க வேண்டிவரும் – முரசொலியில் எச்சரிக்கை

Dinesh A