கோவை அருகே முறையான கட்டமைப்பு இல்லாமல் செயல்பட்டு வந்த நாய்கள் இனப்பெருக்க மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 13 நாய்கள் உடல் கருகி உயிரிழந்தன.
கோவை வடவள்ளி வீரகேரளம் பகுதியில் தனியார் நாய்கள் இனப்பெருக்க மையம் செயல்பட்டு வரும் நிலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஏற்பட்ட தீ விபத்து என்ற நிலையில், அப்பகுதி முழுவதும் எரிந்து நாசமானது. இதனிடையே அவ்வழியாக சென்ற நபர்கள் இது தொடர்பாக, இடத்தின் உரிமையாளருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பெயரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற இடத்தின் உரிமையாளர் உள்ளே சென்று பார்த்த போது அதில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 13 நாய்கள் உடல் கருகி உயிரிழந்திருந்தன. படுகாயம் அடைந்த நாய்களை பாபு என்பவா், மீட்டு சிகிச்சைக்காக கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்றாா்.







