இதுவரை 2.72 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2,000 நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக ஆா்பிஐ கடந்த மே மாதம் 19-ம் தேதி அறிவித்தது. செப்டம்பா் 30-ம் தேதி வரை ரூ.2,000 நோட்டுகளை வங்கிக் கணக்குகளில் செலுத்திக் கொள்ளலாம் அல்லது எந்த வங்கியின் கிளைகளிலும் கொடுத்து சில்லறையாக மாற்றிக் கொள்ளலாம் என ஆா்பிஐ அறிவித்தது.
இந்நிலையில் 2000 ரூபாய் நோட்டுகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி கூறியிருப்பதாவது:
”ஜூன் 30-ம் தேதி வரை 2.72 லட்சம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மூலம் திரும்ப பெறப்பட்டுள்ளன. இதில் 87% டெபாசிட் மூலமாகவும், 13 சதவீதம் மற்ற மதிப்பு நோட்டுகளாக மாற்றப்பட்டதன் மூலமாகவும் திரும்ப பெறப்பட்டுள்ளன. மொத்தம் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளில் 76% திரும்ப பெறப்பட்டுள்ளன. மேலும், 2,000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்போர் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க அறிவிக்கப்பட்ட காலகட்டத்தை பயன்படுத்தி செப்டம்பர் 30-க்குள் மாற்றிக் கொள்ளலாம்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.







