தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நல பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சருக்கு உடல் சோர்வு இருந்த நிலையில் அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் இரைப்பை தொடர்பான (Gastroenterologist) மருத்துவ நிபுணர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் கூறப்படுகிறது.








