முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த தமிழக மீனவருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் அறிவிப்பு

இந்திய கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்த தமிழக மீனவருக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த வாரம் ஒரு படகில் பத்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். மீனவர்கள் கோடியக்கரை – ராமேஸ்வரம் இடையே வடக்கு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பலில் இருந்த கடற்படை வீரர்கள் துப்பாக்கி சூட்டு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் காரைக்காலில் இருந்து சென்ற மீன் பிடி படகின் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது. இதில் படகில் இருந்த மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர் வீரவேல் (32) என்பவருக்கு இடது இடுப்பு மற்றும் வயிற்று பகுதியில் இரண்டு துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் அவர் படுகாயம் அடைந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

இதனை அறிந்த இந்திய கடற்படையினர் உடனடியாக உச்சப்புளி ஐஎன்எஸ் பருந்து கடற்படை முகாமிற்கு தகவல் அளித்தனர் .இதையடுத்து உச்சிப்புளி கடற்படை தளத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று நேரடியாக நடுக் கடலுக்கு சென்று படுகாயமடைந்த மீனவரை மீட்டு ஐஎன்எஸ் பருந்து கடற்படை முகாமுக்கு அழைத்து வந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் கடற்படை முகாமில் இருந்து சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இதனிடையே, தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினரே துப்பாக்கி சூடு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காயமடைந்த மீனவருக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பகா அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் வீரவேல் காயமடைந்ததை அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தாய் – சேய் நலப் பெட்டகம் தொடர்பான வழக்கு: தள்ளுபடி

EZHILARASAN D

முடிவுக்கு வருமா விவசாயிகள் போராட்டம்? 6-வது கட்ட பேச்சுவார்த்தையில் 2 கோரிக்கைகளில் உடன்பாடு!

Saravana

பென்னிகுவிக் பிறந்த தினம்: ஓபிஎஸ் மரியாதை

Niruban Chakkaaravarthi