முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் தகவல்

தமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு குறித்து துறைரீதியாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயபுரத்தில் மத்திய மீன்வளத்துறையின் கடல்சார் பொறியியல் பயிற்சி நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டப் பணிகளை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பார்வையிட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்,  ‘இந்திய கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுடப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் துறைரீதியாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை வந்த பிறகுதான் அது குறித்து முழுமையான விவரம் தெரியவரும். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மீனவர்களுக்கு காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் உரிய இழப்பீடு வழங்கப்படும் இரண்டு ஆண்டுகளில் மீனவத்துறை சார்பில் 2000 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.

இதையடுத்து மேடையில் பேசிய எல்.முருகன், ‘ஸ்வச் பாரத் ( தூய்மை இந்தியா ) மூலம் இந்தியா தூய்மையான நாடாக மாறியுள்ளது. ஸ்வச் பாரத் 2.0 மூலம் மத்திய அரசின் இணை அமைச்சக அலுவலகங்களில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்படுகிறது. அலுவலகங்களில் இருக்கும் தேவையற்ற காகிதங்கள், மரப்பெருட்களை அகற்றி வருகிறோம். அலுவலகங்களில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்றுவதன் மூலம் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. மீனவ மக்களுக்கு தனி அமைச்சகம் வேண்டும் என்ற கோரிக்கை பிரதமர் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது என பேசினார்.

மேலும், ‘தமிழகத்தில் 1800 கோடி அளவிற்கு மீனவ குடியிருப்புகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த செலவிப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 8 ஆண்டில் 32, 500 கோடி ரூபாய் மீனவர்களின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. காசிமேடு துறைமுகம் சர்வதேச தரத்தில் 97 கோடியில் மேம்படுத்தப்படவுள்ளது. ராமேஸ்வரத்தில் கடற்பாசி பூங்கா அமைக்கப்பட விரைவில் ஒப்புதல் வழங்கப்பட உள்ளது. மீன் உற்பத்தி , ஏற்றுமதியில் இந்தியா 2 வது இடம் , இறால் மீன் ஏற்றுமதியில் முதல் இடத்தில் இருக்கிறது. கொரோனா காலத்திலும் மீன் ஏற்றுமதி 32 விழுக்காடு அளவிற்கு அதிகரித்தது எனவும் அவர் கூறினார்.

அனைத்து மீனவர்களுக்கும் கிசான் கிரெடிட் அட்டைகள் தருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சாகர் மித்ரா திட்டம் மூலம் அனைத்து மீனவ கிராமத்திலும் தலா ஒரு இளைஞர் அரசு மூலம் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள் அரசுக்கும் , மகளுக்கும் இடையே பாலமாக இருந்து மத்திய அரசின் திட்டங்களை மீனவ மக்களுக்கு கொண்டு சேர்ப்பர் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அம்பேத்கர் புகைப்படம் வைக்க உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி

Arivazhagan Chinnasamy

அதிமுகவிற்காக களமிறங்கிய கார்த்திக்!

Niruban Chakkaaravarthi

அழுகிய நிலையில் குழந்தையின் உடல் கண்டெடுப்பு!

Jayapriya