குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000: நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு

“தமிழகத்தில் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்குவதற்கான விவரங்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும்” நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். முன்னதாக, மதுரை அவ்வை…

“தமிழகத்தில் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்குவதற்கான விவரங்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும்” நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

முன்னதாக, மதுரை அவ்வை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்த நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மத்திய சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:
தமிழக இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக ஸ்டார்ட் ஆப் நிறுவனங்களிடம் இருந்து அரசுக்குத் தேவையான புதிய தொழில்நுட்பக் கருவிகள் கொள்முதல் செய்யப்படவுள்ளது.
இதற்காக 130 நிறுவனங்கள் ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தது. அவற்றில் 25 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டது. இதனால் இளைஞர்கள் பயன் பெறுவார்கள்.
புதிய கண்டுபிடிப்புகளையும், இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக நிறுவனத்தின் கொள்முதல் திட்டம் தொடங்கப்பட உள்ளது. தகுதி உடைய குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவதற்கான விவரங்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

நகைக் கடன் தள்ளுபடி, 4 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி, பயிர் கடன் தள்ளுபடியில்
நிறைய தவறுகள் நடந்துள்ளது. இதனால் தகுதியுடைய நபர்களுக்கு உரிமைத்தொகை
வழங்குவதற்கான விவரங்களை சேகரித்து வருகிறோம். எவ்வளவு விரைவில் உரிமைத் தொகை வழங்க முடியுமோ அவ்வளவு விரைவில் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.