மாநில கல்லூரியில் இரு ரூட்டைச் சேர்ந்த மாணவர்கள் அடிதடியில் ஈடுபட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.
சென்னைக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் கல்லூரிக்கு செல்லும் பேருந்தை வைத்து, ஒவ்வொரு பேருந்து ரூட்டுக்கும் ஒரு குழுத் தலைவரை நியமித்துக்கொள்வார்கள். அவர்களை ரூட்டுத் தல என சக மாணவர்கள் அழைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். எந்த ரூட்டு தல கெத்து என்பது தொடர்பாக மாணவர்கள் இடையே அடிக்கடி பிரச்னை நிகழ்வது, அவர்கள் பேருந்துகளில், சாலைகளில் ஆக்ரோஷமாக மோதிக்கொள்வதும் நிகழ்ந்து வருகிறது.
சென்னை மாநிலக் கல்லூரியில் பொருளாதாரத் துறை 3ஆம் ஆண்டு படித்து வருபவர் சீனிவாசன், இவர் 57F ரூட்டைச் சேர்ந்தவர். தாவரவியல் துறை 2 ஆம் ஆண்டு படித்து வருபவர் அன்பு, இவர் 6D ரூட்டைச் சேர்ந்தவர். இன்று காலை 11.15 மணியளவில் ரூட்டுத் தல பிரச்னை தொடர்பாக சீனிவாசனை அன்பு உள்ளிட்ட இரண்டாமாண்டு மாணவர்கள் சுமார் 20பேர் இணைந்து சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

57f மற்றும் 6d ரூட் மாணவர்கள் மோதி கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மாநில கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.




