டெண்டரை விரைவில் கொண்டு வர வேண்டும் என டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, தென்மண்டல எஸ்.சி / எஸ்.டி எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அகிலன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நாமக்கல்லை தலைமையிடமாக தென்மண்டல எஸ்.சி / எஸ்.டி எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மூலம் டெண்டர் வர உள்ளது. டெண்டரை நீட்டிக்காமல் எஸ்.சி / எஸ்.டி க்கான டெண்டர் விரைவில் கொண்டு வர வேண்டும். டெண்டர்களில் சில மாற்றங்களை ஆயில் நிறுவனம் கொண்டு வரவேண்டும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
5 ஆண்டுகளாக (வாடகை ) குறைவான விலையில் வாகனத்தை இயக்கி வருகின்றோம். பிரதமரின் ஸ்டேண்ட் ஆப் இந்தியா திட்டத்தின் மூலம் பயன் அடைந்து வருகின்றோம். இத்திட்டத்தின் மூலம் உள்ள வாகனங்கள் குறைந்தது 5 ஆயிரம் கிலோ மீட்டர் இயக்கினால் தான் வாழ்வாதாரம் பாதிக்காது. வங்கியில் வாங்க கூடிய கடனை தவணை முறையில் செலுத்த முடியும். குறைவான கிலோ மீட்டருக்கு வாகனத்தை இயக்கும் போது பாதிக்கப்படுகின்றனர். இதனால் லாரி உரிமையாளர்களுக்கு வாரக்கடன் அதிகமாகி விடுகிறது.
அதனால் எஸ்.சி/ எஸ்.டியினருக்கு வழங்க கூடிய மானியம் ரூ. 25 லட்சத்தை டெண்டர் முழுவதும் இருக்க கூடியவர்களுக்கு வழங்க வேண்டும். டோல் கட்டணத்திற்கு ஆக கூடிய காசுகளையும் தனியாக வழங்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளாதாரம் நிமிர்ந்து நிற்க வேண்டும் என பிரதமர் அவர்கள் கொண்டு வரப்பட்ட ஸ்டேண்ட் ஆப் இந்தியா திட்டத்தினை தோல்வி அடைவது மாதிரி ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன அதிகாரிகள் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். எஸ்சி/ எஸ்டி வாகன உரிமையாளர்களுக்கு குறைவான கிளைமட்டுகள் வழங்கப்படுகிறது.
யார் யாருக்கு எவ்வளவு கிலோமீட்டர் என வெளிப்படையான அறிவிப்பை வெளியிட வேண்டும். எஸ்.சி/எஸ்.டி சார்ந்த நபர்களை பினாமிகளை பயன்படுத்தி வாகனங்களை இயக்கி வருகின்றனர். இதனை ஆயில் நிறுவன அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். ஆயில் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தேவைக்கு அதிகமான வாகனங்களை கேட்பதால்தான் தொழில் போட்டு ஏற்படுகிறது. அந்தந்த ஆயில் நிறுவனங்களின் பிளாண்ட் முன்பு 300 க்கும் மேற்பட்ட வாகனங்கள் லோடுகளை ஏற்றிக்கொண்டு 15 நாட்கள் வரை நிறுத்தப்பட்டுள்ளன. அதிகாரிகள் பொறுப்புடன் இருந்து செயல்பட வேண்டும் என்றார்.
-ம.பவித்ரா