நாடு முழுவதும் 82 குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல்

நாடு முழுவதும் 82 குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது  நாடு முழுவதும் 82 குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பரவலை தடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.10 வயதுக்கு உட்பட்ட…

நாடு முழுவதும் 82 குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது 

நாடு முழுவதும் 82 குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பரவலை தடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தாக்கி வரும் தக்காளி காய்ச்சல் நோய், பெரியவர்களையும் பாதிக்க வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. மற்ற வைரஸ் தொற்று போன்று காய்ச்சல், சோர்வு, உடல் வலிகள் மற்றும் தோலில் தடிப்புகள் போன்ற அறிகுறிகள், தக்காளி காய்ச்சலுக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளது. அதே சமயம், கொரோனா, குரங்கு அம்மை, டெங்கு, சிக்குன்குனியாவுடன் தொடர்புடையது அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளது. காய்ச்சல் அல்லது சொறி அறிகுறிகள் உள்ள குழந்தைகளை கட்டிப்பிடிக்கவோ, தொடவோ வேண்டாம் என்றும் விரல் உறிஞ்சும் பழக்கத்தை நிறுத்த குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மூக்கு ஒழுகுதல் அல்லது இருமல் ஏற்பட்டால் கைக்குட்டையைப் பயன்படுத்த குழந்தையை ஊக்குவிக்கவும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.