காதல் திருமணம்: மனைவியை அடித்துக் கொலை செய்த கணவன்

திருவாரூர் அருகே காதல் திருமணம் செய்த மனைவியை அடித்துக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவாரூர் அருகே ஆண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரியதர்ஷினி. இவரின் பெற்றோர் உயிரிழந்த காரணத்தால் பாட்டி வீட்டில்…

திருவாரூர் அருகே காதல் திருமணம் செய்த மனைவியை அடித்துக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவாரூர் அருகே ஆண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரியதர்ஷினி. இவரின் பெற்றோர் உயிரிழந்த காரணத்தால் பாட்டி வீட்டில் தனது இரண்டு சகோதரர்களுடன் வளர்ந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கல்லூரியில் பயின்ற நண்பரான கேசவமூர்த்தி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் மகன் உள்ளது.

இந்நிலையில், நேற்று எதிர்பாராதவிதமாக பிரியதர்ஷினி வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இதையடுத்து அரசு மருத்துவமனையில் நடந்த உடற்கூறு ஆய்வில் அவரது உடலில் அடித்துக் கொலை செய்யப்பட்ட காயங்கள் இருந்துள்ளது. தகவலின் பேரில் பிரியதர்ஷினியின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், போலீசார் கணவர் கேசவமூர்த்தியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.