மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை சார்பில், ஆண்டு தோறும் திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. தேசிய திரைப்பட விருதுகள், இந்திய சினிமாவில் கலைத்திறன் மற்றும் தொழில்நுட்ப சிறப்பை அங்கீகரிக்கும் மிக உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதன்படி 72-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டில் இந்திய மொழிகளில் வெளியான சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகை, இயக்குநர், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, சிறந்த நடிகர் (ஸ்பெஷன் மென்ஷன்) விருதை நடிகர் ‘தனுஷ்’ ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்திற்காக பெருகிறார். அதேபோல ‘கேப்டன் மில்லர்’ படத்திற்கு தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ் இயக்கிய ‘ராயன்’ திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்றுள்ளது. பிரேம் குமார் இயக்கிய ‘மெய்யழகன்’ படம் சிறந்த ஒலிக்கலவைக்கான (சிறப்பு விருது) தேசிய விருது பெற்றுள்ளது.
சிறந்த முன்னணி நடிகருக்கான விருதை பிரமயுகம் திரைப்படத்திற்காக மமூட்டியும், சந்து சாம்பியன் திரைப்படத்திற்கா கார்த்திக் ஆர்யனும் பகிர்ந்துகொள்கின்றனர்.
சிறந்த திரைப்படத்திற்கான விருதை இந்தி மொழியில் வெளிவந்த ‘Artical 370’ திரைப்படம் பெற்றுள்ளது. சிறந்த முன்னணி நடிகைக்கான விருதை ‘Artical 370’ திரைப்படத்திற்காக ‘யாமி கௌதம்’ பெற்றுள்ளார்.
சிறந்த சண்டை இயக்குநருக்கான விருதை ‘மகாராஜா’ திரைப்படத்திற்காக ‘அனல் அரசு’ பெறுகிறார். அதேபோல சிறந்த துணை நடிகை விருது மகாராஜா திரைப்படத்திற்கா ‘சச்சனா நமிதாஸ்’ பெருகிறார்.
சிறந்த இயக்குநருக்கான விருதை ‘அமரன்’ திரைப்படத்திற்காக இயக்குநர்’ ராஜ்குமார் பெரியசாமி’ பெறுகிறார். சிறந்த இசையமைப்பாளர் விருது அமரன் திரைப்படத்திற்காக ‘ஜி.வி.பிரகாஷ்’-க்கு வழங்கப்படுகிறது. அதேபோல சிறந்த பின்னணி இசைக்கான விருதையும் அமரன் திரைப்படத்திற்காக’ ஜி.வி.பிரகாஷ்’ பெருகிறார். சிறந்த படத்தொகுப்புக்கான விருது அமரன் திரைப்படத்திற்காக ‘ஆர். கலைவாணன்” பெறுகிறார். சிவகார்திகேயன் சாய்பல்லவி நடித்த அமரன் திரைப்படம் 4 விருதுகளை அள்ளிச் சென்றுள்ளது.
சிறந்த திரைக்கதை வசனத்திற்கான விருது ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்திற்காக ‘வெங்கீ அட்லூரி’க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருது ‘புஷ்பா 2’ படத்திற்காக ‘தீபாலி நூர்’ மற்றும் ‘ஷீத்தல் சர்மா’ ஆகியொர் பெருகின்றனர். அதேபோல சிறந்த திரைக்கதை எழுத்தாளருக்கான விருதை ‘புஷ்பா 2’ படத்திற்காக ‘பண்ட்ரெட்டி சுகுமார்’-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த மலையாளப் படத்துக்கான தேசிய விருது இயக்குநர் ஃபாசில் முகமதுவின் ‘பெமினிச்சி பாத்திமா என்ற படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த ஒலியமைப்பாளர்(non-feature film) ‘டி.எஸ் ஹரிஹரசுதன்’ ‘ப்ளூ’ திரைப்படத்திற்காக பெருகிறார். சிறந்த ஒளிப்பதிவாளர் விருது ‘பிரமயுகம்’ திரைப்படத்திற்காக் ஷெஹ்னாத் ஜலால் பெருகிறார்.
தேசிய விருதுகள் அறிவிப்பின்படி ‘அமரன்’ படத்திற்கு 3 விருதுகள், ‘கேப்டன் மில்லர்’ மற்றும் ‘மகாராஜா’ படத்திற்கு தலா 2 விருதுகள், ‘ராயன்’ மற்றும் ‘மெய்யழகன்’ படத்திற்கு தலா ஒரு விருதுகள், ப்ளூ (non-feature) படத்திற்கு ஒரு விருது என மொத்தம் 10 தேசிய விருதுகளை வென்றது தமிழ் சினிமா




