“அமரன் குடும்பத்திற்கு பெருமையான நாள்” – சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

நமது அமரன் குடும்பத்திற்கு இது ஒரு பெருமையான நாள் என்று நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

2024-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களுக்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. இதில் அமரன் திரைப்படம் சிறந்த இயக்குநர், சிறந்த பின்னணி இசை, சிறந்த சிறந்த படத்தொகுப்பு என மூன்று விருதுகளை பெற்றுள்ளது. இந்த நிலையில் தேசிய விருதுபெற்ற அமரன் படக்குழுவுக்கு அப்படத்தின் கதாநாயகன் நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “நமது அமரன் குடும்பத்திற்கு இது ஒரு பெருமையான நாள். 72-வது தேசியத் திரைப்பட விருதுகளில் (2024), சிறந்த இயக்குநருக்கான விருது வென்ற இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, சிறந்த இசை அமைப்பிற்கான (பின்னணி இசை) விருது பெற்று பெருமை சேர்த்த ஜி.வி.பிரகாஷ் மற்றும் சிறந்த படத்தொகுப்பிற்கான விருது பெற்ற கலைவாணன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். ​தேசிய விருதுகளை வென்றுள்ள மற்ற திரைப்பிரபலங்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.