ஐதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் விக்ரம்-1 என்னும் சுற்றுவட்ட ராக்கெட்டை உருவாக்கியுள்ளது. இந்தியாவின் முதல் தனியார் சுற்று வட்ட ராட்கெட்டான இது இன்று (ஜூலை 18) விண்ணில் ஏவப்படுகிறது.
மிஷன் ஆகமன் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஏவுதல் திட்டம், ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் (SDSC-SHAR) முதல் ஏவுதளத்திலிருந்து காலை 11:30 மணிக்கு நடைபெற உள்ளது.
உலகளாவிய தனியார் சுற்றுப்பாதை ஏவுதல் சந்தையில் இதன் மூலம் இந்தியா நுழைகிறது. மேலும் இது நாட்டின் விண்வெளிச் சூழலமைப்பிற்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகவும் விளங்குகிறது




