தமிழ்நாடு முழுவதும் உள்ள மின்வாரிய ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரப்படுத்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மதுரை அரசு விருந்தினர் விடுதி கூட்டரங்கில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார், மின்வாரிய நிர்வாக இயக்குனர் கோவிந்தராவ் ஆகியோர் தலைமையில் மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் மின்வாரிய தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “அனல் மின் நிலையங்களில் ஒப்பந்த பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து சங்கங்கள் பிரதிநிதிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அரசு ஒப்பந்த தொழிலாளர்கள் குறித்த விவரங்களை சேகரித்து அவருகிறோம். அரசு இப்போது தான் பணிகளை தொடங்கி இருக்கிறது. மின்சார வாரியத்தில் பல்வேறு சீரமைப்பு பணிகளை தொடங்கி வருகிறோம். வெள்ளை அறிக்கையில் கூறியது போல கடந்த 5 ஆண்டுகளில் 343 பேர் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளனர். மின்சார வாரியத்தில் தேவையான பணியாளர்களை எடுக்க வேண்டிய சூழல் உள்ளது இதற்கு அரசாங்கத்திற்க சில மாதங்கள் தேவைப்படுகிறது ” என்று அவர் பேசினார்.




