கேரளாவில் கோயில் பணிகளை மேற்கொள்ள முதல்முறையாக ரோபோ யானை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள பெரும்பாலான கோயில்களில் யானைகள் வளர்க்கப்படுகின்றன. மேலும், அதைக் கொண்டு திருவிழாக்களும் பிரம்மாண்டமாக நடத்துவது வழக்கம். இந்நிலையில், கோயில் யானைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்ற புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது. மேலும், யானைகளுக்கு சில சமயம் மதம் பிடிப்பதால் மனித விலங்கு மோதல்களும் ஏற்படுகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதைத் தவிர்க்கும் வகையில், கேரளாவின் திரிச்சூர் நகரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் கோவிலுக்கு இரிஞ்சடப்பள்ளி ராமன் என்ற பெயரிலான ரோபோ யானை ஒன்றை பீட்டா விலங்குகள் நல அமைப்பு நன்கொடையாக வழங்கி உள்ளது. இதற்கு நடிகை பார்வதி திருவோத்தும் நிதியுதவி செய்துள்ளார். திரிச்சூரை சேர்ந்த 4 கலைஞர்கள் ரூ. 5 லட்சம் செலவில் ரோபோ யானையை உருவாக்கியுள்ளனர்.
இதையும் படிக்க: நண்பர் பில்கேட்ஸ் உடன் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா சந்திப்பு
இந்த ரோபோ யானையின் எடை 800 கிலோ ஆகும். 10 அடி உயரம் கொண்ட இந்த யானையின் மேல் 4 பேர் வரை அமரலாம். யானையின் தலை, கண்கள் மற்றும் காதுகளை இயக்குவதற்கு ஐந்து மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
கோயில் யானைகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என்ற புகார்கள் எழுந்து வரும் சூழலில், இந்த சிக்கலுக்கு அறிவியல்பூர்வமாக தீர்வு காணும் வகையில் ரோபோ யானை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது பக்தர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
-ம.பவித்ரா