தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் நேரில் சந்தித்தார்.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தியாவில் பல்வேறு தலைவர்களை சந்தித்து வருகிறார். மஹிந்திரா குழுமத்தின் ஆனந்த் மஹிந்திராவை பில்கேட்ஸ் சந்தித்து பேசியுள்ளார். ஆனந்த் மஹிந்திரா தன்னை பில்கேட்ஸ் நேரில் வந்து சந்தித்த படத்தை ட்விட்டரில் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த பதிவில், மீண்டும் பில்கேட்ஸை பார்ப்பதில் மகிழ்ச்சி. மேலும், எங்களுடைய உரையாடல் முழுவதும் புத்துணர்ச்சியூட்டும் வகையில் அமைந்தது. எங்களுடைய உரையாடல் தகவல் தொழில்நுட்பம் அல்லது எந்தவொரு வணிகத்தையும் பற்றி அல்லாமல் சமூக தாக்கத்தை பெருக்க இணைந்து செயல்படுவது என்பது பற்றி பேசினோம். எனக்கு இதில் ஓரளவு லாபம் கிடைத்தது. எனக்கு அவரது புத்தகமும் ஆட்டோகிராப் உடன் இலவசமாக கிடைத்தது என பதிவிட்டுள்ளார்.
தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவுக்கு பில்கேட்ஸ் புத்தகம் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். அந்த புத்தகத்தில், ”ஆனந்துக்கு, எனது வகுப்பு தோழனுக்கு வாழ்த்துகள்” என்று எழுதி ஆட்டோகிராப் போட்டுள்ளார்.
அண்மைச் செய்தி : மருத்துவர் பரிந்துரையின்றி மருந்து விற்பனை – மருந்தகத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்
முன்னணி தொழிலதிபர்களான ஆனந்த் மஹிந்திராவும் பில்கேட்ஸும் ஒரே வகுப்பு தோழர்களாக இருந்துள்ளனர். 1970ம் அமெர்க்காவின் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பில் கேட்ஸும் ஆனந்த் மஹிந்திராவும் ஒரே வகுப்பில் படித்துள்ளனர். ஆனால் பில்கேட்ஸ் 2 ஆண்டுகளில் தனது படிப்பை நிறுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.