திருப்பூர் மாவட்டம் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் உண்டியல் உடைக்க முயற்சித்து, கோபுரம் அருகே மறைந்திருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் புகழ் பெற்ற அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் அமைந்த்துள்ளது. இந்த கோயிலில் இன்று அதிகாலையில் வழக்கம் போல கோயில் அர்ச்சகர்கள் நடையை திறந்துள்ளனர். அப்போது கோயிலின் உள்ளே பொருட்கள் சிதறியும், இரண்டு உண்டியல்களும் உடைக்க முயற்சி நடந்துள்ளது.
அதேபோல் தெற்கு உள்பிரகார வளாகத்தில் 63 நாயன்மார்கள் உள்ள கோபுரங்களின் கலசம் உடைக்கப்பட்டும், அவிநாசிலிங்கேஸ்வரர் மீது இருந்த துணிகள் களைந்துள்ளதையும் கண்டு அதிர்ச்சி அடைந்த அர்ச்சகர்கள், உடனே கோயில் நிர்வாகம் மற்றும் அவிநாசி போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அர்ச்சகர்கள் கொடுத்த தகவலை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துணை கண்காணிப்பாளர் பவுல்ராஜ் தலைமையில் விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணையில், முருகன் சன்னதியில் வெண்களத்தால் செய்த வேல் மற்றும் சேவல் கொடியுள்ள இரண்டு வேல்கள் மற்றும் உபகாரப் பொருட்கள் காணவில்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து, கோயில் உட்புறம் சோதனை நடத்திய போலிசார், பெரிய கோபுரம் நிலை பகுதியில் ஒருவன் ஒழிந்திருப்பது தெரிந்து, உடனடியாக அவனைப் பிடித்தனர். பிடிபட்டவனிடம் நடத்திய விசாரணையில், அந்த நபர் அவிநாசியை அடுத்த வெள்ளமடை பகுதியைச் சேர்ந்த 32 வயதான சரவண பாரதி என்பது தெரியவந்தது.
அவன், கோயிலில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவனிடமிருந்து வெண்கலத்தால் ஆன வேல், சேவல் கொடி வேல் மற்றும் உபகாரப் பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பின் காவல் துறையினர் அந்த நபரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.